பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு | Kalvimalar - News

பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைப்புஏப்ரல் 19,2021,08:30 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுதும், இரவு நேர ஊரடங்கு, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பிளஸ் 2 தேர்வுகளும், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கொரோனா வேகமாக பரவுவதால், இந்நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

தமிழகத்தில், தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி., சென்னையில் தன் வீட்டில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:


* ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மேலும் சில செயல்பாடுகளுக்கு, நாளை அதிகாலை முதல், மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது


* மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது


*மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 


பிளஸ் 2 தேர்வு தள்ளிவைப்பு


*பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. தற்போது நடந்து வரும் செயல்முறைத் தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.


* கல்லுாரி மற்றும் பல்கலை ஆசிரியர்கள், தங்கள் வீட்டிலேயே, இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு, தனியார் கல்லுாரி மற்றும் பல்கலை தேர்வுகள், இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.


* கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டும், பயிற்சி வழங்கலாம். கோடை கால முகாம்கள் நடத்த, தடை விதிக்கப்படுகிறது


* தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனை களுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து, கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படலாம். இதை சுகாதாரத் துறை ஆய்வு செய்து, அனுமதி வழங்கலாம். இந்த விடுதிகளில், பிற வாடிக்கையாளர்களை, தங்க வைக்கக் கூடாது. 


பீச், சுற்றுலாவுக்கு தடை!


* ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற, அனைத்து சுற்றுலா தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் பயணியர் செல்ல, அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது


* அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை


* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு, அனைத்து நாட்களிலும், பொது மக்களுக்கு அனுமதி இல்லை


* தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், குறைந்தபட்சம், 50 சதவீத பணியாளர்கள், வீட்டிலிருந்தே பணிபுரிய, அந்தந்த நிறுவனங்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும்


விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us