தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை | Kalvimalar - News

தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்ய கோரிக்கைஏப்ரல் 18,2021,13:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளை, மறு ஆய்வு செய்ய வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:


அண்ணா பல்கலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லுாரிகளில், மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட, &'ஆன்லைன்&' தேர்வுகளில், 30 சதவீதத்தினர் மட்டுமே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி, 30 சதவீத மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருப்பது, எந்த வகையிலும் நியாயமல்ல.


பொறியியல் கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள், மாணவர்களின் வாழ்க்கையை துவக்கி வைப்ப தாக இருக்க வேண்டும். மாறாக, மாணவர்களின் வாழ்க்கையை, முடித்து வைப்பதாக இருக்கக் கூடாது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக வகுப்புகள் நடத்தப் படவில்லை. 


ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அவை மாணவர்களுக்கு புரியும்படியாக இல்லை. பொருளாதாரம், தொழில்நுட்பம் இல்லாததால், பல மாணவர்களால், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலவில்லை.


கள சூழலையும், மாணவர்களின் மன அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அனைத்து மாணவர்களையும், தேர்வு எழுதாமலே தேர்ச்சி அடைந்ததாக அறிவிப்பது தான், உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். ஆனால், அண்ணா பல்கலை, மிக கடுமையான முறையில், தேர்வுகளை நடத்தி, மன சாட்சி இல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை சூனியமாக்கி உள்ளது.


கொரோனா காரணமாக, ஒரு ஆண்டு மட்டும், தேர்வுகளை, நெளிவு சுழிவுகளுடன் நடத்துவ தால், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளை, மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us