ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்திவைப்பு | Kalvimalar - News

ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்திவைப்புஏப்ரல் 19,2021,08:34 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக ஜே.இ.இ., முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் சேரவும், ஜே.இ.இ., என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் இரண்டு கட்டமாக, பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் இந்த தேர்வு நடந்தது. இதனையடுத்து, அடுத்த கட்டமாக ஏப்., 27, 28, 30 ஆகிய தேதிகளில் ஜே.இ.இ., மெயின் தேர்வு நடைபெற இருந்தது.


இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், மாணவர்களின் நலன் கருதியும் முத்னமை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. 


மீண்டும் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும், 15 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தை தேர்வுக்கு நன்கு தயாராக பயன்படுத்தி கொள்ளும்படி தேர்வர்களை கேட்டு கொண்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us