தற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்? | Kalvimalar - News

தற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்?டிசம்பர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஐ.டி., துறையின் எதிர்காலம் பற்றிய பயங்கள் இருந்தாலும் இத்துறையின் எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கைகள் தேவையில்லை என்றே கூறலாம். எனினும் ஐ.டி., மட்டும் தான் நமக்கான துறை என்று யாருமே நினைக்க வேண்டியதில்லை.

பிற துறைகளிலும் திறனாளர்களுக்கான எத்தனையோ வேலைகள் இருக்கின்றன. எந்தத் துறையில் சேர விரும்பினாலும் நீங்கள் 6 முதல் 7 ஆண்டுகள் அத் துறையில் அனுபவம் பெற்று திறன்களில் வலுப்பெற்று அதில் நிலைக்க முடியும்.

ஐ.டி., இ அண்ட் சி படிக்கும் நீங்கள் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெறுவது மிக அவசியம். தற்போது 72 சதவீத மதிப்பெண்ணோடு படித்து வரும் நீங்கள் இதை 80க்கும் மேலாக கொண்டு செல்ல முயற்சி செய்யவும். டெலிகாம், எம்பெடட் டெக்னாலஜிஸ், ஆர். அண்ட் டி., பாதுகாப்புத் துறை, நெட்வொர்க்கிங் டொமைன்கள் என உங்களுக்கான வாய்ப்புகள் எத்தனையோ உள்ளன.

இவற்றில் ஏதாவது ஒரு துறையில் நீங்கள் நுழைந்து ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரைஅனுபவம் பெற்றுவிட்டு உங்களது எதிர்காலத் துறை என்ன என்பதை தீர்மானிக்க முடியும். பி.இ., படிப்பவர்கள் டெக்னிகல் அல்லது மேனேஜ்மென்ட் என 2 பிரிவு பணிகளில் ஏதாவது ஒன்றுக்குள் செல்லலாம்.

டெக்னிகல் துறை தான் உங்களுக்கானது என இப்போதே உங்களால் தீர்மானிக்க முடிந்தால், எம்பெடட் டெக்னாலஜிஸ், வி.எல்.எஸ்.ஐ., டிசைன் அல்லது ரோபோடிக்ஸ் என ஒன்றில் சிறப்புப் பயிற்சியைப் பெறலாம்.

இவற்றில் மேற்படிப்புக்காக நீங்கள் வெளிநாட்டுக் கல்வியைக் கூட தேர்வு செய்யலாம். டெக்னிகலை விட மேனேஜ்மென்ட் தான் உங்களுக்கான துறை என தீர்மானித்தால், சிறப்பான கல்வி நிறுவனம் ஒன்றில் எம்.பி.ஏ., படிப்பில் சேருவது சிறந்தது. அதில் ஆபரேஷன்ஸ், மார்க்கெட்டிங், சிஸ்டம்ஸ் மேனேஜ் மென்ட் என உங்களது ஆர்வத்திற்கும் திறனுக்கும் ஏற்ற பிரிவில் சேரலாம்.

சிறப்பான எதிர்காலத்தைப் பெற தொடர்ந்து உங்களது திறன்களை மேம்படுத்தி அனுபவத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us