நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது என்ற பொன்மொழி ஆசிரியர்களின் திறமையை பறைசாற்றுகிறது.
நமது பள்ளி காலம் முதல் நமது வாழ்க்கை வரை ஆசிரியர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. நாம் எதில் கைதேர்ந்தவர்கள், நமது பலம், பலவீனம் எது என்பது பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கு மிக நன்றாக தெரியும்.
ஆசிரியர் பணி என்பது மகத்தான பணி என்று கூறக் காரணம் இந்த பணிக்கு பொறுமை, அர்ப்பணிப்பு, கடமையுணர்வு அனைத்துமே மிக அவசியம். நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட ஆசிரியர் பணிக்கு தேர்வாகிறவர்கள் திறைமையானவர்களா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
டெட்:
பள்ளி ஆசிரியர் ஆவதற்கு முன்பு பி.எட். படிப்பு மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால், கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பின் தமிழகத்தில் ’டெட்’ ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'டெட்’ தேர்வில் 5.42 லட்சம் பி.எட்., பட்டதாரிகள் பங்கேற்றனர். ஆனால் இவர்களில் வெறும் 867 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் வெறும் 0.16 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
சிடேட்:
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை இந்திய அரசின் சார்பாக சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வு கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற மத்திய பள்ளிக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. ஆனால், இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் ஆசிரியர்கள் கூட மாணவர்களுக்கு தேவையான அறிவை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பி.ஜி.சி.இ.,
இது அனைத்திற்கும் மேல் லட்சக்கணக்கான பி.எட்., பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். மற்றொறு புறம் தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான ஆசிரியர்களைத் தேடுகின்றனர். இதெற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் டி.ஏ.வி., பள்ளி குழுமம் பி.ஜி.சி.இ., என்ற புதிய படிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை டி.ஏ.வி., குழும பள்ளிகளின் செயலாளர், ஸ்ரீ விகாஸ் ஆர்யா தெரிவிக்கையில், ”நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பி.எட் பட்டதாரிகளுக்கு அவர்கள் 21-ம் நூற்றாண்டில் கற்பிக்க உண்மையில் தகுதி உள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்த அவசியம் உள்ளது.
டி.ஏ.வி., குழுமம் சென்னை, புதுச்சேரி, ராணிப்பேட்டை போன்ற இடங்களில் பத்து பள்ளிகளை நடத்தி வருகிறது. 16,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்களிடம் கல்வி கற்கின்றனர். மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்குவே எங்களின் நோக்கம். இதன் அடிப்படையில் ஆசிரியர்களின் திறமையை அதிகரிக்க 2018ம் ஆண்டு ஓர் ஆண்டு கால முதுநிலை சான்றிதழ் (பி.ஜி.சி.இ.,) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்’’, என தெரிவித்தார்.
மேலும் இந்த பாடத்திட்டத்தின் தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும். ஒவ்வொன்றும் துவக்கநிலை (I - V), நடுநிலை (VI - VIII) மற்றும் உயர்நிலை (IX & X) கல்வியில் கவனம் செலுத்துகின்றன.
இதில் படிக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மதிய உணவு நேரம் வரை நான்கு மணிநேரம் செலவிடுகிறார்கள். பின் பத்து பள்ளிகளில் ஒன்றில் நடைமுறை அமர்வுகளில் கலந்துகொள்கிறார்கள்.
அதில் அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர்களின் நேரடி வகுப்புகள் மூலம் உள்ளடக்க விநியோகம், மாணவர் உளவியல், வகுப்பு மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கோட்பாடு வகுப்புகள் பின்னர் பிற்பகல் 2.45 மணி முதல் 5.30 வரை கோபாலபுரம் வளாகத்தில் நடத்தப்படுகிறது. ஐ.டி., பணியாளர்கள், இல்லத்தரசிகள், தற்போது ஆசிரியராக பணியாற்றுபவர்கள் என பலதரப்பினரும் இப்படிப்பை படிக்கலாம். தகுதியானவர்களுக்கு 50 சதவீத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு:
இணையதளமுகவரி: www.davshikshanam.org
மொபைல்: 7358273735