விளையாட்டில் வீரம் பதிக்கும் மாணவர்கள் | Kalvimalar - News

விளையாட்டில் வீரம் பதிக்கும் மாணவர்கள்ஏப்ரல் 07,2021,09:43 IST

எழுத்தின் அளவு :

நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப்போட்டிகள் திருப்பூர், முதலிபாளையம், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தன.


முதல் போட்டியின் முதலில் பேட்டிங் செய்த சுலோச்சனா காட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 138 ரன் எடுத்தது. அதிகபட்சமாக வீரர் வினித், 59 பந்துக்கு 60 ரன் எடுத்தார்.


தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய சி.ஆர்., கார்மென்ட் அணி, 19.1 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை பறிகொடுத்து 111 ரன்னில் சுருண்டது. பின்  23 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சுலோச்சனா அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.


மாலையில் நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில், சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் அணி யுனிசோர்ஸ் டிரென்ட் இந்தியா அணிகள் மோதின. &'டாஸ்&' வென்ற சி.ஆர்., ஈகிள் அணி பேட்டிங் தேர்வு செய்துகளமிறங்கியது. அபாரமாக ஆடிய சி.ஆர்., ஈகிள், 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 275 ரன் எடுத்தது.


இத்தொடரில், இதுவரை நடந்த போட்டிகளில், 275 ரன்தான், அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்பிரட் 35 பந்தில் 10 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 83 ரன் எடுத்து அதிரடி காட்டினார். சங்கர் 34 பந்துக்கு ஒரு சிக்சர், 11 பவுண்டரியுடன் 63 ரன் எடுத்தார்.


அடுத்து ஆடிய யுனிசோர்ஸ் அணி 19.3 ஓவரில் 86 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. 189 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சி.ஆர்., ஈகிள் அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது.


வரும் 28 -ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில், அனுகிரஹா பேஷன் மில் அணி, ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us