ஆசிரியர் இடமாறுதல் ஐகோர்ட் கெடு | Kalvimalar - News

ஆசிரியர் இடமாறுதல் ஐகோர்ட் கெடுமார்ச் 04,2021,09:34 IST

எழுத்தின் அளவு :

மதுரை: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்., 30க்குள் நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் தாக்கல் செய்த மனு:


அரசு, கடந்த காலங்களில், தலைமை ஆசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தும். பின், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தும். 2020ல் கொரோனா ஊரடங்கால், இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.நடப்பாண்டு, பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம், சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன்.அதிர்ச்சியளிக்கும் விதமாக, பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது.


பணியில் மூத்த தலைமை ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில், பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசின் நடவடிக்கை உள்ளது. இது, சட்டவிரோதம். விதிமீறல் உள்ளது. 


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ஜேக்கப் குறிப்பிட்டார். 


இதுபோல் பல்வேறு மனுக்கள் தாக்கலாகின. நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை, ஏப்., 30க்குள் நடத்த அனுமதித்து, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us