மீண்டும் துவங்கியது மதிய உணவு திட்டம் | Kalvimalar - News

மீண்டும் துவங்கியது மதிய உணவு திட்டம் மார்ச் 04,2021,09:30 IST

எழுத்தின் அளவு :

காரைக்கால்; கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், நிறுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக காரைக்கால் மாவட்ட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மார்ச் 17ம் தேதி முதல் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது.


அரசின் தளர்வுகள் காரணமாக, தற்போது அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதனால் மாணவர்களுக்கான உணவுக்கு பதிலாக அரிசி மற்றும் பணம் வழங்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது பள்ளிகள் முழு நேரம் இயங்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதையடுத்து, நிறுத்தப்பட்ட மதிய உணவுத் தி்ட்டம் மீண்டும் துவக்கப்பட்டது. மேல்நிலை கல்வி துணை இயக்குனர் கோவிந்தராஜ் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அல்லி ஆகியோர் மதிய உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தனர். 


இதனால், காரைக்காலில் 106 அரசுப் பள்ளிகள், ஐந்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us