தினமலர், வழங்கும் விழித்திரு எனும் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு வெபினார் பிப்., 28ம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெற்றது. தினமலரின் பேஸ்புக், யூடியூப் பக்கங்களிலும், கல்விமலர் இணையதளம் வாயிலாகவும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆன்லைன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி டாக்டர் எம். ரவி, பேராசிரியர் கிருபா சங்கர், நிபுணர் சையத் முகம்மது ஆகியோர் பங்கேற்று வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.
சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?, சைபர் குற்றங்கள் குறித்து முறையிட வேண்டும்?, தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன?, மொபைல் வாயிலாக பண பரிமாற்றும் செய்வது பாதுகாப்பானதா? ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட் போனை பாதுகாப்பது எப்படி? ஆன்லைனில் இடையிடையே வரும் போலி விளம்பரங்களால் வரும் ஆபத்தில் இருந்து காத்துக்கொள்வது எப்படி?, உட்பட உங்களது சைபர் பாதுகாப்பு குறித்த பலர் அனைத்து சந்தேகங்களையும் https://kalvimalar.dinamalar.com/online-seminar/ இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். அவற்றிற்கு நிபுணர்கள் வெபினார் வாயிலாக பதில் அளித்தனர்.