4 ஆண்டுகளாக முக்கிய பணியிடங்கள் காலி | Kalvimalar - News

4 ஆண்டுகளாக முக்கிய பணியிடங்கள் காலிமார்ச் 01,2021,08:43 IST

எழுத்தின் அளவு :

கோவை: பாரதியார் பல்கலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை நிரப்பாமல், பல்கலை நிர்வாகம் இழுத்தடிப்பதாக, பேராசிரியர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்துள்ளது.


பதிவாளர் மட்டுமல்லாமல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைதுார கல்வி மைய இயக்குனர், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் டீன், ஆராய்ச்சி இயக்குனர், மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களும் காலியாகவே கிடக்கின்றன. இப்பதவிகளை நிரப்ப இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்பு, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. புதிய துணைவேந்தர் பொறுப்பேற்றவுடன், காலியிடங்கள் நிரப்ப முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.


புதிய துணைவேந்தர் பதவியேற்ற பின்பு, பதிவாளர் பணியிடம் நிரப்ப சிண்டிகேட் ஒப்புதலும் பெற்று, விளம்பரங்கள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாக அப்பணிகள் பாதியிலேயே முடங்கி கிடக்கின்றன.காலியிடங்கள் நிரப்புவது தொடர்பாக, எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அனைத்து பதவிகளும், பொறுப்பு பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பணிகளுடன், கூடுதல் பொறுப்பு களை சுமக்க வேண்டியிருப்பதால், பேராசிரியர்கள் புலம்பித்தள்ளுகின்றனர்.


தற்போது, மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் சார்ந்த அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு, இப்பதவிகளை நிரப்ப எவ்வித வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.


இது குறித்து, பல்கலை துணைவேந்தர் காளிராஜிடம் கேட்டபோது, &'&'கொரோனா காரணமாகவும், தற்போது அரசு ஓய்வு பெறும் வயது, 59 ஆக அதிகரித்து உள்ளதாலும், நிர்வாக ரீதியாக ஒரு சில விதிமுறை மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. விரைவில் காலியிடங்கள் நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,&'&' என்று பதிலளித்தார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us