சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வெபினார் | Kalvimalar - News

சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வெபினார்பிப்ரவரி 25,2021,08:49 IST

எழுத்தின் அளவு :

தினமலர் நாளிதழ் வழங்கும் விழித்திரு எனும் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்த ஒரு விழிப்புணர்வு வெபினார் வரும் 28ம் தேதி காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.

மொபைல், டேப், கம்ப்யூட்டர், லேப்டாப் என பல்வேறு உபகரணங்கள் வாயிலாக இன்று கோடிக்கணக்கானோர் டிஜிட்டல் உலகுடன் இணைந்துள்ளனர். ஆன்லைனை பெரும்பாலும் கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகள் இன்னும் முழுமையாக திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் ஒன்றே மாணவர்களுக்கு பிரதான தீர்வாகவும் அமைந்துள்ளது. 


இவை தவிர, திறன் வளர்ப்பு, சுய முன்னேற்றம், கருத்தரங்கு, வேலை வாய்ப்பு, ஷாப்பிங் என பல்வேறு காரணங்களுக்காகவும் ஆன்லைனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் எந்த அளவுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், எளிதான வாழ்வை வழங்குகிறதோ அந்த அளவிற்கு அதில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன.


இந்த சூழலில், குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பெண்கள் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?,  சைபர் கிரைம், ஹேக்கிங் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?, சோசியல் மீடியாக்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் நடந்துகொள்வது எப்படி?, ஆன்லைனில் இடையிடையே வரும் போலி விளம்பரங்களால் வரும் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?, சைபர் குற்றங்கள் குறித்து முறையிட யாரை அணுகுவது?, டிஜிட்டல் உலகில் உங்கள் தகவல்கள் திருடப்பட்டால் செய்ய வேண்டியது என்ன? உட்பட  உங்களது சைபர் பாதுகாப்பு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் காண ஆன்லைனில் நிபுணர்களுடன் நேரடியாக கலந்துரையாட, &'விழித்திரு’ வெபினார் வாயிலாக சிறந்த வாய்ப்பை வழங்குகிறது, ‘தினமலர்’.


பங்குபெறும் கருத்தாளர்கள்


இந்த இலவச வெபினாரில், ஐ.பி.எஸ். அதிகாரி டாக்டர் எம். ரவி, பேராசிரியர் கிருபா சங்கர், சைபர் பாதுகாப்பு நிபுணர் சையத் முகம்மது ஆகியோர் பங்கேற்று வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கின்றனர். 


இந்த நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்று பயன்பெற www.kalvimalar.com எனும் இணையதளத்தில், பெயர், மொபைல் எண் ஆகிய தகவல்களை அளித்து பதிவு செய்யுங்கள்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us