சென்னை புத்தக கண்காட்சி 24ல் துவக்கம் | Kalvimalar - News

சென்னை புத்தக கண்காட்சி 24ல் துவக்கம்பிப்ரவரி 23,2021,09:18 IST

எழுத்தின் அளவு :

சென்னையின் 44வது புத்தக கண்காட்சி, வரும் 24ல் துவங்கி, மார்ச் 9 வரை நடக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கமான, &'பபாசி&'யின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில், பிரமாண்ட புத்தக கண்காட்சி நடப்பது வழக்கம். இந்தாண்டு, கொரோனா பரவல் கட்டுப்பாடுகளின் காரணமாக, ஜனவரியில் புத்தக கண்காட்சி துவங்கவில்லை. 


இந்நிலையில், வரும், 24ல், 44வது புத்தக கண்காட்சி துவங்குகிறது. அதை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பெசன்ட் நகர் கடற்கரையில், 21ம் தேதி காலை, 6:00 மணிக்கு மினி மாரத்தானை துவக்கி வைக்கிறார்.


புத்தக கண்காட்சி குறித்து, பபாசி தலைவர் சண்முகம் மற்றும் துணை தலைவர்கள் ஒளிவண்ணன், நாகராஜ் உள்ளிட்டோர் நேற்று அளித்த பேட்டி:


சென்னையின், 44வது புத்தக கண்காட்சியை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்.


நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தலைமை ஏற்கிறார். அன்று மாலை, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சிறந்த பதிப்பாளர்களுக்கு சிறப்பு செய்கிறார். இந்தாண்டு முதல், புத்தக கண்காட்சி நடத்த, அரசு, 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது.


தொடர்ந்து, தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கும். இந்தாண்டு, 700 அரங்குகளில், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. புத்தக கண்காட்சியில் அரங்கு அமைக்க இயலாதவர்களுக்கு உதவும் வகையில், &'ரேக்&' என்ற திட்டம் தொடங்கப்படும்.


கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கிருமி நாசினி, முக கவசம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், புத்தக கண்காட்சி அரங்குகளுக்கிடையிலான பாதைகள், 25 அடி அகலமுள்ளதாக அமைக்கப்படும்.குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், கதை சொல்லல் நிகழ்வு நடைபெறும். பங்கேற்கும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்படும். வாசகர்களுக்கு வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தப்படும்.


உலக அறிவியல் தினமான பிப்., 28ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், அனைத்து அரங்குகளிலும், அறிவியல் சார்ந்த நுால்கள் முன்னிலைப்படுத்தப்படும். உலக மகளிர் தினமான மார்ச், 8ல், அனைத்து அரங்குகளிலும், பெண் எழுத்தாளர்கள், வாசகர்களிடம் உரையாடி, வாங்கும் புத்தகத்தில் கையெழுத்திடுவர். அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும், மகளிரால் நடத்தப்படும்.வெளி அரங்கில், நுால் வெளியீடுகள் தினமும் நடக்கும். நுாலரங்குகளில், நுால் வெளியீடு, நுால் அறிமுக நிகழ்ச்சிகள் நடக்கும்.


இந்த புத்தக கண்காட்சிக்கு, 10 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். நுழைவு சீட்டுகள் குலுக்கப்பட்டு, நுால் பரிசுகள் வழங்கப்படும். ஓவிய கண்காட்சி அரங்கும் உண்டு. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us