எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் | Kalvimalar - News

எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்பிப்ரவரி 23,2021,09:05 IST

எழுத்தின் அளவு :

புதுச்சேரி; கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எல்.எஸ்.ஈ., குளோபல் அகாடமி சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.


மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர். வேலைவாய்ப்பு முகாமை கல்லுாரி முதல்வர் மலர்க்கண் துவக்கி வைத்தார். எல்.எஸ்.ஈ., குளோபல் அகாடமி நிறுவன மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர். அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


முகாமில், 100க்கும் மேற்பட்ட எம்.ஐ.டி.,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பணி நியமன ஆணை பெற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us