காரைக்கால்; காரைக்கால் அடுத்த பத்தக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் மூலிகை தோட்டம் மற்றும் பூந்தோட்டம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கி மூலிகைத் தோட்டம் மற்றும் பூந்தோட்டத்தை திறந்து வைத்து பேசினார். பள்ளி பொறுப்பாசிரியர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் தொடர்பான ஓவியப் போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.