சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகைக்கான தேசிய அளவிலான திறன் தேர்வு, நேற்று தமிழகம் முழுதும் நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு, 8 மற்றும், 10ம் வகுப்புக்கு பின், மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையை பெற, தேசிய அளவில் திறன் தேர்வு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெற்று முன்னிலை பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதன்படி, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, என்.எம்.எஸ்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, நேற்று தமிழகம் முழுதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். காலை, பிற்பகல் என, இரண்டு வேளைகளில், இரண்டு வகை வினாத்தாள்களுக்கு தேர்வு நடந்தது.
கொரோனா விதிகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு, இத்தேர்வு நடத்தப்பட்டது. எட்டாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்காத போதும், ஆன்லைன் என்றில்லாமல், நேரடியாக நடத்தப்பட்ட இந்த தேர்வில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.