9, பிளஸ் 1 வகுப்பு பிப்., 1ல் துவக்கம்? | Kalvimalar - News

9, பிளஸ் 1 வகுப்பு பிப்., 1ல் துவக்கம்?ஜனவரி 23,2021,09:37 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பிப்., 1 முதல் பள்ளிகளை திறக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, நாளை மறுநாள் ஆலோசனை நடத்தி, முதல்வரின் ஒப்புதல் பெறப்பட உள்ளது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, 2020 மார்ச் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புதிய கல்வி ஆண்டு துவங்கினாலும், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடந்தன.


இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும், 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இம்மாதம் 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. நான்கு நாட்களாக, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் முடிவுகள், 29ம் தேதி வெளியாக உள்ளன.


இதையடுத்து, தொற்று எண்ணிக்கை குறைந்த அளவில் மட்டுமே இருந்தால், பிப்., 1 முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகளை நடத்தலாம் என, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, தலைமை செயலகத்தில், நாளை மறுதினம் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.


இதில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.


&'இந்த ஆலோசனையின் முடிவில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளை துவங்குவது குறித்து, முதல்வரிடம் ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படும்&' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us