தமிழகத்தில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில், 2021 - 22ம் கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்களுக்காக, அண்ணா பல்கலை சார்பில், &'டான்செட்&' என்ற, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது. இதன்படி, பொது நுழைவுத் தேர்வு, மார்ச், 20, 21ல் நடக்கும். நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க, பிப்., 12 கடைசி நாள். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 -- 2235 8289 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.