சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பிற பொதுத் துறை பாங்குகளை விட ஸ்டேட் பாங்கில் ஒருவர் வேலை பார்ப்பது பல விதங்களில் பயன்தரக்கூடியதாக இருந்து வந்தது உண்மை தான். ஸ்டேட் பாங்க் என்பது அளவிலும் வாணிபத்திலும் உலக அளவில் பெரிய வங்கிகளுல் ஒன்றாக விளங்கி வருவதை அறிந்திருப்பீர்கள்.
எனினும் இன்றைய கால கட்டத்தில் புதிதாக எந்த பொதுத் துறை பாங்கில் சேருபவராக இருந்தாலும் அவருக்கான எதிர்கால வாய்ப்புகள் ஓரளவு
சமமாகவே இருக்கின்றன என்றே கூறலாம். வி.ஆர்.எஸ்.,ஸில் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியே சென்றதால் ஸ்டேட் பாங்க் கடந்த சில மாதங்களாக ஏராளமான வாய்ப்புகளை அறிவித்து காலியிடங்களை நிரப்பி வருகிறது.
இதனால் துடிப்புமிக்க இளைஞர் கூட்டம் இன்று ஸ்டேட் பாங்கில் நிறைந்து வருகிறது. இது போலவே தான் பிற வங்கிகளிலும் வாய்ப்புகள் நிறைய
அறிவிக்கப்படுகின்றன. எனவே வங்கிப் பணியில் நுழையவிருக்கும் நீங்கள் எந்த வங்கி என்பதை உங்களது இருப்பிடத்துக்கு அருகாமையில் பணி புரிய முடிகிறதா அல்லது உங்களது எதிர்கால குறிக்கோளை நிறைவேற்ற ஏதுவாக எந்த பணியிடம் உதவலாம் போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கலாம்.
எதை தேர்வு செய்தாலும் மிக விரைவாக ஜே.ஏ.ஐ.ஐ.பி., சி.ஏ.ஐ.ஐ.பி., போன்ற துறைத் தேர்வுகளை முடித்து விரைவாக வளர்ச்சி ஏணியில் ஏறுவதையே நாங்கள் அறிவுறுத்துகிறோம். வாழ்த்துக்கள்.