டிசம்பர் 7ம் தேதி கல்லுாரிகள் திறப்பு | Kalvimalar - News

டிசம்பர் 7ம் தேதி கல்லுாரிகள் திறப்புநவம்பர் 30,2020,12:07 IST

எழுத்தின் அளவு :

சென்னை: எட்டு மாதங்களுக்கு பின், இறுதிஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 7ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.


கொரோனா தொற்று பரவலால், மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:


நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், வரும் 7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 


மருத்துவ மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள் 7ம் தேதி முதல் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது. எனினும்,  2020-21ம் கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்தாண்டு பிப்ரவரி 1ம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us