சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் முதலாண்டு வகுப்புகள் துவங்கியது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பி.எஸ்.சி., விவசாயம் மற்றும் பி.எஸ்.சி., தோட்டக்கலை படிப்புகள், முதுகலை அறிவியல் பிரிவில் உழவியல் தோட்டக்கலை, மரபியல் பூச்சியியல், பயிர் நோயியல், நுண்ணுயிரியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் வேளாண் விரிவாக்க துறை ஆகிய படிப்புகள், பட்டய பிரிவில் வேளாண், தோட்டக்கலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், 2020- 2021 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழி கலந்தாய்வின் மூலம் நடத்தப்பட்டது.பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு வகுப்புகள் இணைய வழியில் நேற்று துவங்கின. முதலாண்டு ஒருங்கிணைப்பாளர் கலையரசன் வரவேற்றார். வேளாண்துறை முதல்வர் மணிவண்ணன், புதுமுக மாணவர்களை வரவேற்று, முதலாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார். துறைத் தலைவர்கள் கணபதி மாணிக்கவாசகம், ஸ்டெல்லா, அறிவழகன், ஆறுமுகம், ஷகிலா பானுமதி, வெற்றிச்செல்வன், ஈஸ்வரன் பங்கேற்றனர்.