10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம் | Kalvimalar - News

10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்நவம்பர் 23,2020,09:39 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு, கண்டிப்பாக பொதுத் தேர்வுகள் நடக்கும், என, சி.பி.எஸ்.இ., செயலர் அனுராக் திரிபாதி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலான பள்ளிகள், இதுவரை திறக்கப்பட வில்லை. &'ஆன்லைன்&' வாயிலாக வகுப்புகள் நடந்து வருகின்றன. முறையான வகுப்புகள் இதுவரை துவங்கப்படாததால், அடுத்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நடக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் செயலர் அனுராக் திரிபாதி, ஒரு நிகழ்ச்சியில், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


சி.பி.எஸ்.இ.,யின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும். அதற்கான அட்டவணை, விரைவில் வெளியிடப்படும்.


தேர்வுக்கான திட்டங்கள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்த விபரங்களை விரைவில் வெளியிடுவோம். மார்ச் - ஏப்ரல் மாதங்களில், என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தோம். ஆனால், நம் பள்ளிகளும், ஆசிரியர்களும் இணைந்து, சூழ்நிலையையே மாற்றிக் காண்பித்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us