துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு போராட்டம் | Kalvimalar - News

துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு போராட்டம்நவம்பர் 21,2020,19:05 IST

எழுத்தின் அளவு :

சென்னை: துணைவேந்தர் சுரப்பாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் அண்ணா பல்கலை முன் போராட்டம் நடந்தது.


இந்நிலையில் துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிரான புகார்கள் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்த உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணைக்கு அண்ணா பல்கலையின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல மாணவர்கள் தரப்பிலும் சுரப்பாவுக்கு ஆதரவு கிடைத்துள்ளது.


அரசின் விசாரணையை ரத்து செய்யக்கோரி நேற்று பல்கலையின் வாயிலில் மாணவர்களும் பேராசிரியர்களும் போராட்டம் நடத்தினர். 

அதேநேரம் துணைவேந்தர் சுரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் காந்திமண்டபம் அருகே போராட்டம் நடந்தது. இரண்டு போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்காத நிலையில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் போலீசார் பாதுகாப்பளித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us