அரியர் வழக்குக்கு விசாரணையில் பாதிப்பு | Kalvimalar - News

அரியர் வழக்குக்கு விசாரணையில் பாதிப்புநவம்பர் 21,2020,19:04 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'அரியர் தேர்வு&' ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க, காணொலி இணைப்பில், நுாற்றுக்கணக்கானோர் நுழைந்ததால், வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது.


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக, பொறியியல் மற்றும் கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.


இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடவும் கோரினர்.


இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. விசாரணை பட்டியலில், 26வது வழக்காக இருந்தது. காலையில், நீதிபதிகள் வழக்கு விசாரணையை துவங்கினர். அப்போது, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், காணொலி இணைப்பில் நுழைந்தனர். 350 பேர், &'லாக் இன்&' செய்திருந்தனர்.அதிகம் பேர் இணைப்பில் இருந்ததால், விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டது.


உடனே, விசாரணையை நீதிபதிகள் நிறுத்தினர். தேவையின்றி இணைப்புக்குள் வந்தவர்களை வெளியேறும்படி, வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். பின், வழக்கு விசாரணை தொடர்ந்தது. அக்., 29ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும், மாணவர்கள் ஏராளமானோர் இணைப்பில் நுழைந்து சத்தமிட்டனர். அவர்களை, நீதிபதிகள் எச்சரித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us