லண்டன்: இந்தாண்டுக்கான ஆங்கில நாவலுக்கான, &'புக்கர்&' பரிசுக்கு, ஸ்காட்லாந்து எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டுவர்ட்டின், &'ஷக்கி பெயின்&' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இலக்கியத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில், புக்கர் பரிசுக்கு முக்கிய இடம் உண்டு. சிறந்த படைப்புகளுக்கு, புக்கர் பரிசாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. சிறந்த ஆங்கில நாவல்களுக்கு இந்தப் பரிசு, 1969ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிது. இந்த ஆண்டுக்கான பரிசுக்கு, 162க்கும் அதிகமான எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர்.
இறுதிச் சுற்றுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அவ்னி தோஷியின் &'பிரன்ட் சுகர்&' என்ற நாவல் உட்பட, ஆறு புத்தகங்கள் தேர்வாயின. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டக்ளஸ் ஸ்டூவர்ட் எழுதிய, &'ஷக்கி பெயின்&' நாவல், புக்கர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
பிழைப்புக்காக ஓர் குடும்பம் எதிர்கொள்ளும் போராட்டம் பற்றியும், அந்த போராட்டங்களுக்கு இடையில், சோர்ந்துபோன பெற்றோரை நேசிக்கும் குழந்தைகள் பற்றியும், மிக உருக்கமாக, இந்த நாவலில் டக்ளஸ் எழுதியுள்ளார்.