மருத்துவ கவுன்சிலிங் பொதுப் பிரிவுக்கு 23ல் துவக்கம் | Kalvimalar - News

மருத்துவ கவுன்சிலிங் பொதுப் பிரிவுக்கு 23ல் துவக்கம்நவம்பர் 21,2020,19:01 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவப் படிப்பில், இன்று சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்; நாளை மறுநாள், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெறும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு உள்விளையாட்டு அரங்கில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்றுடன் முடிவடைந்தது. இதில், உள்ஒதுக்கீட்டில் உள்ள, 313 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. 92 பி.டி.எஸ்., பல் மருத்துவப் படிப்பு இடங்களில், 86 இடங்கள் நிரம்பியுள்ளன.


இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 5 சதவீத எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, 10 இடங்கள் உள்ளன. விளையாட்டு பிரிவில், ஏழு எம்.பி.பி.எஸ்., மற்றும்- ஒரு பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.மேலும் விபரங்களை, tnhealth.tn.gov.in, tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.


இதன்பின், வரும், 23 முதல், டிச., 4 வரை, பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.வரும், 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவர் சேர்க்கை நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us