அரியர் தேர்வு ரத்து இல்லை ஐகோர்ட்டில் யு.ஜி.சி., தகவல் | Kalvimalar - News

அரியர் தேர்வு ரத்து இல்லை ஐகோர்ட்டில் யு.ஜி.சி., தகவல்நவம்பர் 19,2020,14:50 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலை மானியக் குழு தெரிவித்துள்ளது.


கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் பொறியியல் கல்லுாரிகள் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இறுதி செமஸ்டர் தவிர்த்து மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்தி தேர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணை 2020 ஆக. 26ல் பிறப்பிக்கப்பட்டது.


இதை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் உயர் கல்வித் துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கல்லுாரி மாணவர்களுக்கு &'அரியர்&' தேர்வை நடத்தும்படி உத்தரவிட வேண்டும்&' என கூறப்பட்டுள்ளது.


இம்மனுக்களுக்கு பல்கலை மானியக் குழு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 20ம் தேதிக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வு தள்ளி வைத்தது.இந்நிலையில் அரியர் தேர்வு எழுதாமல் அதன் முடிவுகளை பல்கலைகள் வெளியிடக் கூடாது; ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அவற்றை வாபஸ் பெறவும் கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தார்.


இம்மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பல்கலை மானியக் குழுவின் நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


பல்கலை மானியக் குழு சார்பில் வழக்கறிஞர் சுதா ஆஜராகி &'&'அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது; யு.ஜி.சி. வழிமுறைகள் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது&'&' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us