மரைன் இன்ஜினியரிங் படிப்பு | Kalvimalar - News

மரைன் இன்ஜினியரிங் படிப்புஅக்டோபர் 31,2020,19:41 IST

எழுத்தின் அளவு :

கடல்சார் படிப்புகளுள் ஒன்றான மரைன் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வாய்ப்புகளும் அந்த கடல் அளவிற்குப் பரந்து விரிந்து கிடக்கிறது என்றே சொல்லலாம். இது கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு பட்டப்படிப்பாகும்.

கப்பலை வடிவமைப்பது, பராமரிப்பது, சரக்குக் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து கருவிகள் பராமரிப்பு என இதில் பல பிரிவுகள் உள்ளன. கைநிறைய சம்பளத்துடன் உலகையே சுற்றும் மரைன் இன்ஜினியர்கள், ஒரு கப்பலின் மொத்த நிர்வாக அமைப்புகளிலும் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள். கப்பலின் இன்ஜின் அறை துவங்கி மோட்டார் அறை, நீராவி இன்ஜின், புரப்பல்லிங் இன்ஜின், காஸ் மற்றும் ஸ்டீம் இன்ஜின் டர்பைன் உபகரணங்கள் பராமரிப்பு என கப்பல் இயங்குவதற்கு அடிப்படையாகத் தேவைப்படும் அனைத்தையும் இவர்களே நிர்வகிக்கின்றனர்.


படிப்புகள்:

 பி.டெக்., மரைன் இன்ஜினியரிங் - 4 ஆண்டுகள்

 பி.இ., மரைன் இன்ஜினியரிங் - 4 ஆண்டுகள்

 எம்.டெக்., மரைன் இன்ஜினியரிங் - 2 ஆண்டுகள்

 எம்.இ., மரைன் இன்ஜினியரிங் - 2 ஆண்டுகள்

 எம்.டெக்., ஓஷன் இன்ஜினியரிங் அண்ட் நேவல் ஆர்கிடெக்சர் - 2 ஆண்டுகள்

 டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்


குறுகிய கால படிப்புகள்:

 ஓர் ஆண்டு மரைன் இன்ஜினியரிங் படிப்பு

 4 மாத எலக்ட்ரோ டெக்னிக்கல் ஆபிசர் படிப்பு


தகுதிகள்:

இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவைத் தேர்வு செய்து படித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில், இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வேலை வாய்ப்புகள்:

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகள் வேலை என இத்துறை பட்டதாரிகளுக்குப் பணி வாய்ப்புகள் ஏராளம். மரைன் இன்ஜினியர், ஓஷன் இன்ஜினியர், நேவல் ஆர்க்கிடெக்ட், மரைன் ஸ்ட்ரக்ச்சர் இன்ஜினியர், டிபன்ஸ் என தங்களுக்கு விருப்பமான வேலையை இவர்கள் தேர்வு செய்யலாம். இத்துறை பட்டதாரிகளுக்கு மர்ச்சண்ட் நேவியில் சேருவதற்கான நேரடி தகுதி உள்ளது.


எங்குப் படிக்கலாம்:

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட கப்பல் துறை பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் மதுரையில் அமைந்திருக்கும் ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்ஸ் கல்வி நிறுவனம், மரைன் இன்ஜினியரிங் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கது.


இங்கு சேர்க்கை பெற தேசிய அளவில் நடத்தப்படும் ஐ.எம்.யூ.சி.இ.டி., தகுதித் தேர்வினை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும். மரைன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் அல்லது 4 ஆண்டு ஷிப் பில்டிங் இன்ஜியரிங்கில் டிப்ளமா படித்த மாணவர்களுக்கு நேரடியாக 2ம் ஆண்டில் ’லேட்ரல் என்ட்ரி’ வழங்கப்படும். இதற்கு ஐ.எம்.யூ.சி.எ.டி., தேர்வு எழுதியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.


Advertisement

வாசகர் கருத்து

There are a lot of jobless people after completing marine engineering and nautical science,so please be aware
by Venkatesh Ramdas,India    2020-10-31 17:11:19 17:11:19 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us