நீட் தேர்விற்கு ஏழ்மை ஒரு தடையல்ல! | Kalvimalar - News

நீட் தேர்விற்கு ஏழ்மை ஒரு தடையல்ல!அக்டோபர் 31,2020,19:42 IST

எழுத்தின் அளவு :

நீட் தேர்வில் வெற்றி பெற, ஏழ்மை ஒரு தடையல்ல, சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும், பாடங்களை புரிந்து படித்தாலே போதும், வெற்றி நம் வாயிற்கதவை தட்டும் என, உணர்த்தியுள்ளனர்,

அரசு பள்ளி மாணவ - மாணவியர்.கோ.சக்தி பிரியா 123 / 720சதாவரம், காஞ்சிபுரம் மாவட்டம்: என் தந்தை நெசவு தொழில் செய்கிறார். சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆங்கில வழியில் பயின்று, பிளஸ் 2 தேர்வில், 600க்கு 332 மதிப்பெண் பெற்றேன். நீட் தேர்வுக்கு என, பிரத்யேகமாக எந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. அதேபோல, &'ஆன்லைன்&' உள்ளிட்ட எந்த வகுப்புகளிலும் பங்கேற்கவில்லை. 


பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்களை மட்டுமே படித்தேன். &'நீட்&' தேர்வு என்பது கடினம் என. பலர் கூறிவந்த நிலையில், என் குடும்பத்தினர் எனக்கு அளித்த ஊக்கத்தால், வெற்றி பெற வேண்டும் என முயற்சி செய்து படித்ததால், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன். முயற்சித்தால் முடியாதது ஏதுமில்லை. பிசியோதெரபிஸ்ட் ஆக வேண்டும் என்பது என் லட்சியம்.


பா.நிவேதா 130 / 720அரசு மேல்நிலைப்பள்ளி,அய்யங்கார்குளம், காஞ்சிபுரம் மாவட்டம்: என் தந்தை நெசவுத்தொழில் செய்து வருகிறார். நீட் தேர்வு எழுத எனக்கு முதலில் பயமாக இருந்தது. தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியர் அளித்த ஊக்கத்தினாலும், அறிவுரையாலும், &'நீட்&' தேர்வுக்கான பாடங்களை படித்து வந்தேன். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், ஒரு மாதம் ஆன்லைன் வழியாக, இலவச பயிற்சி அளித்தனர். அதன்மூலம், தேர்வுக்கான பல தகவல்களை அறிந்து கொண்டேன். அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தால், மருத்துவ படிப்பை படிக்க விரும்புகிறேன். குடும்ப சூழ்நிலையால், தனியார் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு வசதி இல்லை.-


கோ.கிரிதரன், 127/720, வாலாஜாபாத்: என் தந்தை பஞ்சர் கடை வைத்துள்ளார். &'நீட்&' தேர்வு எழுத வேண்டும் என, ஆசிரியர்கள் பலர் ஊக்குவித்தனர். அதற்கு ஏற்ப, பள்ளி நிர்வாகமும், பொதுத்தேர்விற்கு முன்னரே, நீட் தேர்விற்குரிய பாட திட்டத்தை, சிறப்பு வகுப்பாக எடுக்க துவங்கிவிட்டனர். பாடங்களை புரிந்து படித்ததாலே, நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடிந்தது. என்னிடம் இருந்த திறமைகளை, தகுந்த நேரத்தில் எடுத்துக் கூறிய ஆசிரியர்களுக்கு நன்றி.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us