அரியர் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக் கூடாது: ஐகோர்ட் | Kalvimalar - News

அரியர் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக் கூடாது: ஐகோர்ட்அக்டோபர் 30,2020,07:53 IST

எழுத்தின் அளவு :

சென்னை: அரியர் தேர்வு ரத்து குறித்து, பல்கலை மானிய குழுவின் நிலைப்பாட்டை, பதில் மனுவில் தெரிவிக்காததற்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.


அரியர் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக் கூடாது என்றும், கேள்வி எழுப்பி உள்ளது.கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர்களுக்கான கட்டணம் செலுத்தி, தேர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு, தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதை எதிர்த்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.


யு.ஜி.சி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், &'இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும்; முந்தைய தேர்வுகளின் அடிப்படையில், இறுதியாண்டு மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்ய முடியாது&' என, கூறப்பட்டது.


யு.ஜி.சி., பதில் மனுவை பரிசீலித்த நீதிபதிகள், &'அரியர் தேர்வு ரத்து விஷயத்தில், யு.ஜி.சி.,யின் நிலைப்பாடு என்ன; அதுபற்றி பதில் மனுவில் குறிப்பிடாதது ஏன்; இறுதி ஆண்டு மாணவர்களை பொறுத்தவரை, உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்து விட்டது.&'இடைப்பட்ட செமஸ்டர் தேர்வு ரத்து பற்றி, ஏன் பதில் அளிக்கவில்லை&' என, கேள்வி எழுப்பினர்.


இதையடுத்து, அரியர் தேர்வு ரத்து குறித்து, கூடுதல் மனுவை தாக்கல் செய்வதாக, யு.ஜி.சி., வழக்கறிஞர் தெரிவித்தார். உடனே, நீதிபதிகள் கூறியதாவது: 


நீதிமன்றத்தை கேலி செய்யாதீர்கள்; நாங்கள் கேள்வி கேட்டால் தான், பதில் சொல்வீர்களா; பதில் மனு தயாரிப்பதற்கு முன், அரசாணையை முழுமையாக படித்தீர்களா; அரசாணையை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்கு, உங்கள் பதில் என்ன... அரசாணையைப் பற்றி யு.ஜி.சி., புரிந்து கொண்டது என்ன... யு.ஜி.சி., செயலரை ஆஜராக சொல்லுங்கள்; காணொலி வாயிலாக ஆஜராகட்டும். அவர், நீதிமன்றத்துக்கு உதவட்டும். யு.ஜி.சி.,க்கு ஏன் வழக்கு செலவு தொகை விதிக்கக் கூடாது.


ஆன்லைனில் தேர்வு எழுத, இறுதி ஆண்டு மாணவர்களை அனுமதிக்கும் போது, அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஆன்லைனில் ஏன் தேர்வு நடத்தக் கூடாது.மாணவர்களின் நலன் கருதி அரசாணை வெளியிட்டதாக கூறும் போது, மற்றவர்களின் நலன்களையும் அரசு ஆராய வேண்டாமா...இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


இதையடுத்து, யு.ஜி.சி., வழக்கறிஞர், &'அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில், யு.ஜி.சி.,க்கு உடன்பாடு இல்லை&' என்றார். விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாகவும், யு.ஜி.சி., வழக்கறிஞர் தெரிவித்தார். உயர் கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் மனோகரன் ஆஜராகி, &'&'பதில் மனு தயாராகி வருகிறது; யு.ஜி.சி., பதில் மனு, இன்று தான் கிடைத்தது. &'&'யு.ஜி.சி., வழிமுறைகளை பரிசீலித்து தான், அரசாணை பிறப்பிக்கப்பட்டது. விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம்,&'&' என்றார். அதைத் தொடர்ந்து, விசாரணையை, நவ., 20க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us