பொறியியல் கல்லுாரிகள் பெருக யார் காரணம்: நீதிபதிகள் கேள்வி | Kalvimalar - News

பொறியியல் கல்லுாரிகள் பெருக யார் காரணம்: நீதிபதிகள் கேள்விஅக்டோபர் 30,2020,07:51 IST

எழுத்தின் அளவு :

மதுரை: தமிழகத்தில், புற்றீசல் போல் பொறியியல் கல்லுாரிகள் பெருக யார் காரணம் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருச்சி, கிருஷ்ண சமுத்திரம் கார்த்திக் தாக்கல் செய்த மனு:


தமிழகத்தில், 90 சதவீதம் தனியார் பொறியியல் கல்லுாரிகள், கொரோனா ஊரடங்கில், மாணவர்களிடம், 40 சதவீதம் கல்வி கட்டணம் வசூலித்தன.


நடவடிக்கை


ஆனால், தனியார் பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, சில மாதங்களே ஊதியம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலை இணைய முகவரிக்கு புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.


எனவே, தனியார், சுயநிதி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள், பணியாளர்களின் கொரோனா கால ஊதியம் உறுதி செய்ய வேண்டும். அதுவரை, நடப்பு கல்வி ஆண்டில், பொறியியல் கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டிருந்தது.


மனுவை, நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்த போது, &'தனியார் பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள், பல மாதங்களாக, ஊதியமின்றி, பிரியாணி கடைகளில் பணிபுரிந்து, குடும்பம் நடத்தி வருகின்றனர்&' என, மனுதாரர் வழக்கறிஞர் கூறினார்.


நீதிபதிகள் உத்தரவு:


தமிழகத்தில், புற்றீசல் போல், பொறியியல் கல்லுாரிகள் பெருக யார் காரணம். அனுமதி வழங்கியவர்களே மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமத்திற்கு காரணம்.


மனு தாக்கல்


தமிழகத்தில் தற்போது, பொறியாளர்கள் உருவாவ தில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர். தேவைக்கு ஏற்ப, கல்லுாரிகள் துவங்கினால், பிரச்னைகள் வராது. தனியார் பொறியியல் கல்லுாரி நிர்வாகிகள் சங்கத்தை, எதிர் மனுதாரராக சேர்த்து, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us