வங்கி பணிகள் தேர்வு ஸ்டாலின் கண்டனம் | Kalvimalar - News

வங்கி பணிகள் தேர்வு ஸ்டாலின் கண்டனம்அக்டோபர் 24,2020,20:31 IST

எழுத்தின் அளவு :

சென்னை: எஸ்.பி.ஐ., வங்கி பணிகளுக்கான, முதல்நிலை தேர்வு விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:


எஸ்.பி.ஐ., என்ற பாரத ஸ்டேட் வங்கியின், &'ஜூனியர் அசோசியேட்ஸ்&' பணிகளுக்கான முதல்நிலை தேர்வில், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் குறைந்த, &'கட் ஆப்&' மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


பாரத ஸ்டேட் வங்கியில், காசாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வேலைவாய்ப்பு, முன்னேறிய வகுப்பினருக்கான, இந்த, 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீட்டால் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் தரப்பிலிருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துங்கள் என, அழுத்தம் கொடுக்கப்பட்ட செய்திகளை, இதுவரை முதல்வர் மறுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன?


சமூக நீதி வரலாற்றில், இதுபோன்ற வரலாற்று பிழைகளுக்குத் துணை போகும் அ.தி.மு.க.,வும், அதன் ஆட்சியும் அடியோடு, தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள், வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

90 sathavikithathaithakuthi Illaavidinum
by a natanasabapathy,India    2020-10-25 15:19:41 15:19:41 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us