சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு | Kalvimalar - News

சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்புஅக்டோபர் 24,2020,20:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சுற்றுலா துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அவகாசம் அளித்துள்ளது.


தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உதவி சுற்றுலா அதிகாரி நிலை - 2 பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும், 26ம் தேதி முதல், நவ., 5க்குள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.தகவல் தொழில்நுட்ப துறையில் கணினி அமைப்பு, இன்ஜினியர் மற்றும் பகுப்பாய்வாளர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 27ம் தேதி முதல் நவம்பர், 5க்குள், தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.


சான்றிதழ் பதிவேற்ற வேண்டியவர்களின் பட்டியல் மற்றும் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us