கல்வித் தொலைக்காட்சி பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் | Kalvimalar - News

கல்வித் தொலைக்காட்சி பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் அக்டோபர் 24,2020,20:28 IST

எழுத்தின் அளவு :

சென்னை: 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கபடவில்லை. ஆன்லைன் வழியாகவே பாடம் நடத்தப்படும் சூழலில், அரசு சார்பில் கல்வித் தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாத நிலையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 போன்ற பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் படங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் முக்கிய தலைப்புகளை மட்டும் ஆழமாக படிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us