மைசூரு பல்கலை., நூற்றாண்டு விழா | Kalvimalar - News

மைசூரு பல்கலை., நூற்றாண்டு விழாஅக்டோபர் 17,2020,22:15 IST

எழுத்தின் அளவு :

மைசூரு: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள மைசூரு பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.


இது குறித்து பல்கலை துணை வேந்தர் பேராசிரியர் ஹேமந்த்குமார் கூறியதாவது:


மைசூரு பல்கலைகழகம் கடந்த 1916ம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி துவங்கப்பட்டது. நாட்டின் ஆறாவது பல்கலைகழகமாக உருவானது. இப்பல்கலைழகத்தின் நூற்றாண்டு விழா வரும் 19ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட இருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக டிஜிட்டல் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.


விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் 19ம் தேதி காலை 11.15 மணி முதல் 11.45 மணி வரையில் கலந்துரையாடுகிறார் பல்கலை., வேந்தரும் கவர்னருமான வஜூபாய் ஆர்.வாலா மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்திக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். கொரோனா தொற்று வழிகாட்டுதல் படி விழாவில் கலந்து கொள்ள 100 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக அடையாளத்திற்காக 10 பட்டதாரிகளுக்கு மட்டும் பட்டம் வழங்கப்படும்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us