கலைக்கல்லுாரி பாடப்பிரிவுகளில் கூடுதல் இடம் அனுமதிக்க கோரிக்கை | Kalvimalar - News

கலைக்கல்லுாரி பாடப்பிரிவுகளில் கூடுதல் இடம் அனுமதிக்க கோரிக்கைசெப்டம்பர் 28,2020,11:13 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்விக்காக கலைக் கல்லுாரிகளில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்புக்கு இடையே மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 95.65 சதவீதம் சிவகங்கை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 7ம் இடத்தை பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் உயர்கல்விக்காக கலைக்கல்லுாரிகளில் படிக்க விண்ணப்பிக்கின்றனர். 


கலைக்கல்லுாரிகள் குறைந்த அளவே உள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக மாணவர்கள் கலைக்கல்லுாரிகளில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


ஒவ்வொரு பாடத்திலும் கூடுதலாக 10 இடங்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படுவதால் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யும் போது இரு ஷிப்டுகளில் அதிக மாணவர்கள் படிக்க வாய்ப்புள்ளது. பல்கலைக் கழகங்கள் கலைக் கல்லுாரிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும்சேர்க்கை அனுமதியினை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us