அண்ணாமலை பல்கலை ஆன்லைன் மூலம் தேர்வு | Kalvimalar - News

அண்ணாமலை பல்கலை ஆன்லைன் மூலம் தேர்வு செப்டம்பர் 15,2020,08:59 IST

எழுத்தின் அளவு :

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., நேரடி படிப்பு மற்றும் தொலைதுாரக் கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய தளம் வழியாக தேர்வுகள் வரும் 21 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.


கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலைதுாரக் கல்வி வாயிலாக இறுதியாண்டு, இறுதி பருவ மாணவர்களுக்கு இணைய தளம் (ஆன்லைன்) மூலம் 2020ம் ஆண்டுக்கான தேர்வுகள் இம்மாதம் வரும் 21 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.தமிழக உயர் கல்வித்துறையின் உத்தரவுபடி, இணைய வழியில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன் ஆகியோர் ஒப்புதலோடு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன் தேர்வு அட்டவணையை நேற்று அறிவித்தார்.


தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகள் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in மற்றும் அந்தந்த துறைகள் மூலம் தெரிவிக்கப்படும். 


இணைய வழி தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவர்கள், துறை தலைவர்களை தொடர்பு கொள்ளலாம்.மாணவர்களின் நலன் கருதி, மாதிரி தேர்வு இணைய தளம் வழியாக அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இத்தகவலை பல்கலை கழக பதிவாளர் ஞானதேவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us