சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை | Kalvimalar - News

சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகைஆகஸ்ட் 06,2020,20:06 IST

எழுத்தின் அளவு :

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டிற்காக கேளம்பாக்கத்தில், 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட எங்கள் கல்லூரியில், பல்கலைக்கழக அளவில் துறைவாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. விளையாட்டு துறையில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு 100 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


‘நாக்’ தரச்சான்று பெற்ற இக்கல்லூரியில் பி.ஏ.,-ஆங்கிலம், பி.எஸ்.டபிள்யூ., பி.எஸ்சி.,-கணிப்பெறியியல், கணிதம், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பயோ-டெக்னாலஜி, எலக்ட்ரானிக் மீடியா, விசுவல் கம்யூனிகேஷன், பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., என பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளும், எம்.ஏ.,-ஜர்னலிசம் அண்ட் கம்யூனிகேஷன், எம்.எஸ்சி.,-கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, அப்ளைடு மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, எம்.எஸ்.டபிள்யூ.,எம்.காம்., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி துறைகளில் ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்படுகின்றன. 


மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில், ஆய்விதழ்கள், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கட்டுரைகள், மாத இதழ்களும் உள்ள நூலகமும், நவீன வசதிகளுடன் விளையாட்டு அரங்குகளும், மாணவர் விடுதிகளும் உள்ளன. அனுபவமிக்க பேராசிரியர்களைக்கொண்டு செயல்படும் இக்கல்லூரியில் சீனா, பூட்டான், கொரியா, இந்தோனேசியா, தைவான், திபெத், மொரீசியஸ், ஓமன் நாடுகளை சேர்ந்த மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர். 


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us