அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை அனுப்பும் பணி தீவிரம் | Kalvimalar - News

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை அனுப்பும் பணி தீவிரம்ஆகஸ்ட் 06,2020,19:55 IST

எழுத்தின் அளவு :

தையல் மகளிர் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதல் கட்ட சீருடை அனுப்பும் பணி நடந்து வருகிறது. 


மாவட்ட தையல் மகளிர் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சீருடைகள் தைத்து வழங்கப்படுகிறது. கொரோனா காலத்திலும், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, போதிய பாதுகாப்புடன் சீருடைகளை தைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்டம், தையல் மகளிர் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தலைவர் ஜோதிபழனிசாமி, இந்த சங்கத்தில் உள்ள, 2,836 பேருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன், ஒரு லட்சத்து, 5,000 மாணவ, மாணவியருக்கு தலா, இரு சீருடை செட்களை தைக்க வழங்கினார். 


இச்சங்க பணியாளர்கள், இவற்றை தைத்து முடித்து, தர்மபுரியில் உள்ள, இந்த சங்க அலுவலகத்தில் வழங்கினர். இவற்றை சங்க தலைவர் ஜோதிபழனிசாமி மற்றும் நிர்வாகிகள், கல்வித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us