மதிப்பெண் பட்டியல் வழங்காததால் பிளஸ் 1 மாணவர்கள் ஏமாற்றம் | Kalvimalar - News

மதிப்பெண் பட்டியல் வழங்காததால் பிளஸ் 1 மாணவர்கள் ஏமாற்றம்ஆகஸ்ட் 06,2020,19:52 IST

எழுத்தின் அளவு :

சேலம்: தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றோருக்கு, மதிப்பெண் பட்டியல், நேற்று காலை, 9:00 மணி முதல், அவரவர் பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல், நகல் பெறுதல் உள்ளிட்டவைக்கும் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 


நேற்று காலை முதல், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, மாணவ, மாணவியர் படையெடுத்தனர். மதிப்பெண் பட்டியலை, தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிபார்த்து கையொப்பமிட்டு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. மதியம் வரை, மதிப்பெண் பட்டியல், இணையதளத்தில் வெளியாகவில்லை. 


இதனால், பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரை, நாளை வர அறிவுறுத்தி, ஆசிரியர்கள் திருப்பியனுப்பினர். இதனால், ஏமாற்றத்துடன் மாணவர்கள் வீடு திரும்பினர். கொரோனா பரவல் நேரத்தில், மாணவ, மாணவியரை அலைக்கழிக்கும் இப்போக்கு, பெற்றோரை அதிருப்தியடைய செய்தது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us