ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்து | Kalvimalar - News

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்துஆகஸ்ட் 06,2020,08:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை; மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி:


கடந்த ஆண்டு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளான, மதுரை மாவட்டம், மணி நகரம் பகுதியைச் சேர்ந்த பூரணசுந்தரி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலநாகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்று, சாதனை புரிந்துள்ளனர். இதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன். இருவரின் மன உறுதியும், விடா முயற்சியும் தான், அவர்களுடைய வெற்றிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


தேர்வில் வெற்றி பெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும், &'மக்கள் சேவையே மகேசன் சேவை&' என்ற, அடிப்படையில், கடமைகளை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், அரசு நலத் திட்டங்களை, மக்களிடம் சேர்த்து, மக்கள் நலம் மேம்படும் வகையில், பணிகளை செய்ய வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us