கிளாட் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு | Kalvimalar - News

கிளாட் தேர்வு மீண்டும் ஒத்திவைப்புஆகஸ்ட் 05,2020,22:34 IST

எழுத்தின் அளவு :

சட்டப்படிப்பை மேற்கொள்ள எழுதவேண்டிய ’காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ எனும் ‘கிளாட்’ தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவர்சிட்டி, நல்சார் யுனிவர்சிட்டி ஆப் லா,  நேஷனல் லா இன்ஸ்டிடியூட் யுனிவர்சிட்டி உட்பட நாட்டிலுள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட இதர கல்வி நிறுவனங்கள் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எல்.எல்பி., எனும் இளநிலை சட்ட பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 


நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ‘கிளாட்’ தேர்வு முன்பே தள்ளிவைக்கப்பட்டு ஆக., 22ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நிர்வாகக் குழு இத்தேர்வை மீண்டும் ஒத்தி வைப்பதாக முடிவெடுத்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரையிலும் இத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


விபரங்களுக்கு: https://consortiumofnlus.ac.in/


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us