மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Kalvimalar - News

மாணவர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவுஆகஸ்ட் 05,2020,15:29 IST

எழுத்தின் அளவு :

சென்னை; மாணவர்களுக்கு முட்டை, மாணவியருக்கு, நாப்கின் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை; மாணவர்களுக்கு முட்டை, மாணவியருக்கு, நாப்கின் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த மனுவில், &'ஊரடங்கால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு சாப்பிட்டு வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், &'அம்மா&' உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும் திட்டம் வகுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்&' என, கூறப்பட்டு உள்ளது.


மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, சமூக நலத்துறை செயலர் மதுமதி தாக்கல் செய்த பதில் மனு:ரேஷன் பொருட்களுடன் முட்டை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்தது. அழியக்கூடிய தன்மை உள்ளதால், பெற்றோர், குழந்தைகளை வரவழைத்து முட்டை வழங்க இயலாது. எனவே, மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு, அரிசி, பருப்பு வழங்க, சமூக நலத்துறை உத்தரவிட்டுஉள்ளது. இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, &'ஏற்கனவே, மாணவர்களுக்கு மதிய உணவின் போது, முட்டை வழங்கப்பட்டு வந்தது. எனவே, தொடர்ந்து முட்டை, மாணவியருக்கு, நாப்கின் வழங்குவதை பரிசீலிக்க வேண்டும்&' என்றனர்.


இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஊரடங்கு நேரத்தில் முட்டைகளை எடுத்து வந்து வழங்குவதில், நடைமுறை பிரச்னைகள் இருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


ஊரடங்கு அமலில் இருப்பதால், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட முடியாத மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களுக்கு முட்டை வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் பெற்றோர், பள்ளிகளுக்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே, மாணவர்களுக்காக, பள்ளிகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவற்றோடு சேர்த்து, முட்டையும் வழங்கலாம். மாணவியருக்கு, நாப்கின் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us