கலை, அறிவியல் படிப்பில் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் விண்ணப்பம்! | Kalvimalar - News

கலை, அறிவியல் படிப்பில் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் விண்ணப்பம்!ஆகஸ்ட் 05,2020,12:19 IST

எழுத்தின் அளவு :

கலை, அறிவியல் படிப்பு மீதான ஆர்வத்தால் தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இருக்கும் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கலை, அறிவியல் படிப்பு மீதான ஆர்வத்தால் தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இருக்கும் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இந்த கல்லுாரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. இறுதிநாளான ஜூலை 31 வரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 


விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் பதிவேற்ற ஆக.,5 கடைசி நாளாக இருந்த நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் விண்ணப்பித்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆக.,10 வரை சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் ஆக.15க்குள் சரிபார்ப்பு செய்து கட்-ஆப் அடிப்படையில் சீட் வழங்கப்படும். சீட் கிடைத்த விபரங்கள் மாணவர்களுக்கு அலைபேசி, இ-மெயில் மூலம் தெரிவித்து ஆக.20க்குள் அட்மிஷன் நடத்தப்பட உள்ளது. இம்மாதத்திலேயே ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us