அரசு பள்ளி மாணவர்கள் ஆசையை தடுக்க கூடாது | Kalvimalar - News

அரசு பள்ளி மாணவர்கள் ஆசையை தடுக்க கூடாதுஆகஸ்ட் 04,2020,19:00 IST

எழுத்தின் அளவு :

சென்னை; அரசு பள்ளி மாணவர்கள், பல மொழிகளை கற்கும் ஆற்றலை தடுக்கும் வகையில், தமிழக அரசு செயல்படக் கூடாது என, தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழகத்தில், 50 ஆண்டுகளாக, இரு மொழி கல்வி இருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக மும்மொழி திட்டம் தான் உள்ளது. ஐ.சி.எஸ்.சி.இ., - சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில், மும்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.இவற்றில், 90 சதவீதம், மூன்றாவது மொழியாக ஹிந்தி உள்ளது.


ஸ்டாலின் கூறுவது போல, இரு மொழி கல்வி, அரசு பள்ளிகளில் மட்டுமே உள்ளது. அரசு ஒரு கொள்கை வகுத்தால், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அரசு பள்ளிகளுக்கு, ஒரு கொள்கை என்பது பாகுபாடாக உள்ளது.தமிழகத்தில் உள்ள, தனியார் கல்வி நிறுவனங்களில் கணிசமானவை, தி.மு.க.,வினரால் நடத்தப்படுகின்றன.


அவற்றில் பெரும்பாலானவை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கெல்லாம் மும்மொழி கல்வி தான். ஹிந்தி கட்டாயம் இல்லாத, மத்திய அரசு நடத்தும், இலவச உறைவிட பள்ளியான, நவோதயா பள்ளிகளை, தி.மு.க., எதிர்க்கிறது.ஆனால், தமிழுக்கே இடமில்லாத ஹிந்தி கட்டாயமாக உள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர, தி.மு.க.,வினர் போட்டி போடுகின்றனர்.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒவ்வொரு எம்.பி.,யும், மாணவர்களை சேர்க்க பரிந்துரைக்க முடியும். ஹிந்தி படிக்க, தி.மு.க., - எம்.பி.,க்கள் பரிந்துரை செய்து விட்டு, ஹிந்தியை எதிர்க்கின்றனர்.ஏழை அரசு பள்ளி மாணவர்கள், பல மொழிகளை கற்கும் ஆற்றலை, ஆசையை தடுக்கும் வகையில், தமிழக அரசு செயல்படக் கூடாது. இவ்வாறு, பிரசாத் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us