யோகா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் | Kalvimalar - News

யோகா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்ஆகஸ்ட் 03,2020,14:02 IST

எழுத்தின் அளவு :

சென்னை; இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இது குறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சென்னை, அரும்பாக்கம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி மற்றும் ஒன்பது தனியார் கல்லுாரிகள் உள்ளன.அரசு கல்லுாரியில், 60 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 600க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.


தனியார் கல்லுாரிகளில் இருந்து, அரசுக்கு, 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை, நாளை காலை, 10:00 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை, www.tnhealth.tn.gov.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த படிப்புக்கு, பிளஸ் 2ல் அறிவியல் பாடங்களை படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள, அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை தபால் அல்லது கூரியர் வாயிலாக, வரும், 31ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், &'தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 106&' என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை நேரிலும் சமர்ப்பிக்கலாம்.


விண்ணப்ப கட்டண விபரம், கட்டண விலக்கு உள்ளிட்ட, அனைத்து விபரங்களையும் தகவல் தொகுப்பேட்டினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இயக்குனர் அலுவலகத்திலோ, தேர்வு அலுவலகத்திலோ, கல்லுாரிகளிலோ விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us