இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: யு.ஜி.சி., | Kalvimalar - News

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை: யு.ஜி.சி.,ஆகஸ்ட் 02,2020,19:25 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என, உச்ச நீதிமன்றத்தில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் இறுதியில் இருந்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. கல்லுாரிகளில், இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்கு, கடைசி செமஸ்டர் தேர்வு, நடத்தப்படாமல் உள்ளது.


&'வரும் செப்டம்பர் மாதத்திற்குள், இறுதி செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும்&' என, பல்கலை, கல்லுாரிகளுக்கு உத்தரவிட்ட யு.ஜி.சி., அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதை எதிர்த்து, பல்வேறு பல்கலைகளில் படிக்கும், 31 மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


மனுவில், &'யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக உள்ளன. கொரோனா தொற்றுக்கு மத்தியில், தேர்வுகள் நடத்துவது, மாணவர்களின் உடல் நலத்துக்கு நல்லதல்ல&' என, கூறியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, யு.ஜி.சி.,க்கு உத்தரவிட்டது.


இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், யு.ஜி.சி., சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறியிருப்பதாவது: இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால், அது மாணவர்களின் எதிர்காலத்தை, சரிசெய்ய முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, வேறு ஒரு தேதியில் எழுத, வாய்ப்பு வழங்கப்படும்.தேர்வுகள் நடத்த, நீதிமன்றம் புதிய காலக்கெடுவை தீர்மானிக்கக் கூடாது.


தேர்வுகளை ரத்து செய்த, மஹாராஷ்டிரா, டில்லி அரசின் முடிவுகள், யு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறானது. மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்த பின்னரே, தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு, பிரமாணப் பத்திரத்தில், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us