நூலகங்கள் திறக்கப்படுமா? வாசகர்கள் எதிர்பார்ப்பு | Kalvimalar - News

நூலகங்கள் திறக்கப்படுமா? வாசகர்கள் எதிர்பார்ப்புஜூலை 31,2020,15:58 IST

எழுத்தின் அளவு :

திருப்பூர்: நுாலகங்களை திறக்க வேண்டுமென, வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மாநிலம் முழுதும், மாவட்ட, மைய, கிளை நுாலகங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுாலகங்கள் உள்ளன. மாவட்டத் தலைமை நுாலகங்களில், ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா பரவலால், கடந்த மார்ச் 25ல் நுாலகங்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களாக இவை மூடப்பட்டிருப்பதால், வாசகர்கள் தவிக்கின்றனர்.


வாசகர்கள் கூறுகையில், &'நுாலகங்களுக்கு, வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகளவில் வருவர். இங்கு, சமூக இடைவெளி கடைபிடிப்பதில், எந்தச்சிரமமும் இருக்காது.


நுாலக உறுப்பினர்களாக உள்ளவர்கள் பலரும், கொரோனா விழிப்புணர்வு உள்ளவர்களாகவே இருப்பர். எனவே, நுாலகங்கள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள், இந்த நேரத்தில், அறிவுப்பூர்வ விஷயங்களை அறிந்துகொள்ள புத்தக வாசிப்பு உதவும்,&' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us