பொருளாதாரத்தில் பின்தங்கியோர் சான்றிதழை பிற மாநிலங்களில் பயன்படுத்தலாமா? | Kalvimalar - News

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் சான்றிதழை பிற மாநிலங்களில் பயன்படுத்தலாமா?ஜூலை 31,2020,15:55 IST

எழுத்தின் அளவு :

சென்னை: &'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்படும், வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை, மற்ற மாநிலங்களில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து, அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய முடியும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


விசாரணைகல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு வழங்கி உள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள், வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 4ல், மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் பிறப்பித்த உத்தரவில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் அளிக்க வேண்டாம் என, கூறப்பட்டுஉள்ளது.


இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரெட்டி நல சங்க நிர்வாகி கிருபாகரன், அகில பாரத பிராமணர் சங்கத் தலைவர் குளத்துமணி, தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். 


இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். 


மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், தமிழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான, 10 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அட்வகேட் ஜெனரல் கூறினார்.


நிபந்தனை: மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், &'மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கு மட்டுமே, இந்த சான்றிதழை பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். &'பிற மாநிலங்களில் சான்றிதழை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்&' என்றனர்.


அதற்கு, அட்வகேட் ஜெனரல், &'மற்ற மாநிலங்களில் சான்றிதழை பயன்படுத்துவது குறித்து, அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய முடியும்&' என்றார். மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.


இதையடுத்து, &'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக வழங்கப்படும் சான்றிதழ்களை, மற்ற மாநிலங்களில் பயன்படுத்துவது தொடர்பாக, அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய முடியும்&' என, தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us