ஆன்லைனில் நீட் தேர்வு சாத்தியமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி | Kalvimalar - News

ஆன்லைனில் நீட் தேர்வு சாத்தியமா? சுப்ரீம் கோர்ட் கேள்விஜூலை 29,2020,20:09 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: நீட் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


கேரளாவை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 


அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 


மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா பாதிப்பால், அவர்களால் இந்தியா வந்து நீட் தேர்வை எழுத முடியாது. எனவே அவர்கள், நீட் தேர்வை எழுத தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் அல்லது கொரோனா பாதிப்பு சரியாகும் வரை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும். என குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்தக்கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும், இந்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us