தற்காலிக தட்டச்சர்களை மறு பணியமர்த்த உத்தரவு | Kalvimalar - News

தற்காலிக தட்டச்சர்களை மறு பணியமர்த்த உத்தரவுஜூலை 01,2020,19:11 IST

எழுத்தின் அளவு :

சென்னை; தமிழ்நாடு அமைச்சு பணியில், தட்டச்சர்களாக, சுருக்கெழுத்து தட்டச்சர்களாக, தற்காலிகமாக பணிபுரிவோரை, மீண்டும் பணியமர்த்த, அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு அமைச்சு பணி மற்றும் நீதித்துறை அமைச்சு பணியில் காலியாக இருந்த, தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் பணியிடங்கள், 2007ல் தற்காலிகமாக நிரப்பப்பட்டன.அவர்களுக்கு, ஓராண்டு பணி நிறைவடைந்ததும், ஒரு நாள் பணியிடை முறிவு வழங்கி, மீண்டும் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர்.


அவர்களை நிரந்தரமாக்க, தேர்வாணையம் சார்பில், 2009ல் சிறப்பு போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பெற்றோர் நிரந்தரமாக்கப்பட்டனர். தேர்ச்சி பெற்றும், சில காரணங்களுக்காக, தொடர்ந்து தற்காலிக பணியில் இருப்போர், தேர்வில் தோல்வி அடைந்தோர், தேர்வு எழுதாதோர், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் எல்லாம், தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான பணிக்காலம், ஜூலை, 4ல் நிறைவடைகிறது.


எனவே, அவர்களுக்கு, நாளை ஒரு நாள் பணியிடை முறிவு வழங்கி, நாளை மறுதினம் முதல், மீண்டும் தற்காலிக அடிப்படையில், பணி அமர்த்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.இதை அமல்படுத்தும்படி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஸ்வர்ணா, அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் எழுதி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து

தேர்வில் தோல்வி அடைவது திராவிட நாட்டில் முக்கியமான தகுதி. அவர்களுக்கு அரசு வேலை கொடுத்து வாக்கு வங்கி உருவாக்குவது திராவிட பாரம்பர்யம். நீதி மன்றத்தில் சாட்சி ஒண்ணு சொல்லுவான். தட்டச்சன் வேறொண்ணு தட்டுவான். படிச்சுப் புரிஞ்சுக்கத் தெரியாத சாட்சியிடம் அவசரமா கையெழுத்து வாங்குவான். நீதி வெல்லும்.
by அசோக்ராஜ் ,India    04-ஜூலை-2020 08:48:52 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us